TN LMS
Available courses
கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது வளரிளம் பருவத்தினர் பல்வேறு உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டனர். இதை ஈடு செய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேவையான மனவெழுச்சி நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை திறன்சார் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மனவெழுச்சி நல்வாழ்வு கட்டகமானது 30 செயல்பாடுகளுடன் அடிப்படை மற்றும் இறுதி மதிப்பீட்டை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து செயல்பாடுகளிலும் UNICEFஆல் வரையறுக்கப்பட்ட பத்து விரிவான வாழ்க்கைத் திறன்களும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த மனவெழுச்சி நல்வாழ்வு அம்சங்களும் (WHO) ஒருங்கிணைதக்கப்பட்டுள்ளது.. அடிப்படையில். ஒவ்வொரு செயலிலும் 4 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு செயல்பாடும் ஒரு காணொலியுடன் தொடங்குகிறது, அதில் வாழ்க்கைத் திறனை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருத்து இயங்குபடமாக (அனிமேஷன்) மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து அறிவு அடிப்படையிலான செயல்பாடு ஒன்றின் வாயிலாக, மாணவர்கள் காணொலி மூலம் தாங்கள் பெற்ற அறிவை மூலம் தாங்களே மதிப்பீடு செய்து கொள்ளலாம். அறிவு அடிப்படையிலான செயல்பாட்டிற்குப் பிறகு, மாணவர்கள் கலை மற்றும் செயல்திறன் அடிப்படையிலான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர், இது அவர்களின் உயர்-சிந்தனை திறன் மேம்பட உதவுகிறது. பயிற்சியை முடித்தபின், மாணவரின் புரிதலை மேம்படுத்த செயல்பாடு வாயிலாக வலியுறுத்தப்படும் வாழ்வியல் திறன்கள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றன.
அமர்வின் இறுதிப் பகுதியானது பிரதிபலிப்பு மற்றும் மதிப்பீடு பிரிவாகும், இதில் வழங்கப்பட்டுள்ள அறிவு சார்ந்த வினாக்கள் மற்றும் சில திறந்த வகை வினாக்கள் மாணவர்களின் கற்றலை பிரதிபலிக்கவும் வாழ்க்கையில் பயன்படுத்தவும் உதவும்.
கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது வளரிளம் பருவத்தினர் பல்வேறு உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டனர். இதை ஈடு செய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேவையான மனவெழுச்சி நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை திறன்சார் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் மன நலனை மேம்படுத்தவும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கவும், மகிழ்ச்சியான கற்றலில் ஈடுபடவும், TNSED ஆனது 2022-23 ஆம் கல்வியாண்டில் வளரிளம் பருவ மாணவர்களுக்காக ஆக்கப்பூர்வமான பாடத்திட்டம் மற்றும் கலை சார்ந்த பயிற்சி கட்டகங்களை அறிமுகப்படுத்தியது. இப்பயிற்சியானது தமிழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 14 மாவட்டங்களில் உள்ள 44 கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் (EBBs) செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2,50,000 க்கும் மேற்பட்ட மாணவ , மாணவியருக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் மூலம் செயல்பாடுகளை மேற்கொண்டு கற்றுக் கொள்ளும் வகையிலான மின்னணு (டிஜிட்டல்) பதிப்பைத் தயாரித்துள்ளது. இதன் அடிப்படையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளைக் கையாளும் அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களிடம் இத்திட்டத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து TPD பயிற்சிகள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருகின்றன.
மனவெழுச்சி நல்வாழ்வு கட்டகமானது 30 செயல்பாடுகளுடன் அடிப்படை மற்றும் இறுதி மதிப்பீட்டை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து செயல்பாடுகளிலும் UNICEFஆல் வரையறுக்கப்பட்ட பத்து விரிவான வாழ்க்கைத் திறன்களும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த மனவெழுச்சி நல்வாழ்வு அம்சங்களும் (WHO) ஒருங்கிணைதக்கப்பட்டுள்ளது.. அடிப்படையில். ஒவ்வொரு செயலிலும் 4 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு செயல்பாடும் ஒரு காணொலியுடன் தொடங்குகிறது, அதில் வாழ்க்கைத் திறனை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருத்து இயங்குபடமாக (அனிமேஷன்) மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து அறிவு அடிப்படையிலான செயல்பாடு ஒன்றின் வாயிலாக, மாணவர்கள் காணொலி மூலம் தாங்கள் பெற்ற அறிவை மூலம் தாங்களே மதிப்பீடு செய்து கொள்ளலாம். அறிவு அடிப்படையிலான செயல்பாட்டிற்குப் பிறகு, மாணவர்கள் கலை மற்றும் செயல்திறன் அடிப்படையிலான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர், இது அவர்களின் உயர்-சிந்தனை திறன் மேம்பட உதவுகிறது. பயிற்சியை முடித்தபின், மாணவரின் புரிதலை மேம்படுத்த செயல்பாடு வாயிலாக வலியுறுத்தப்படும் வாழ்வியல் திறன்கள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றன.
அமர்வின் இறுதிப் பகுதியானது பிரதிபலிப்பு மற்றும் மதிப்பீடு பிரிவாகும், இதில் வழங்கப்பட்டுள்ள அறிவு சார்ந்த வினாக்கள் மற்றும் சில திறந்த வகை வினாக்கள் மாணவர்களின் கற்றலை பிரதிபலிக்கவும் வாழ்க்கையில் பயன்படுத்தவும் உதவும். ஆசிரியர்கள், செயல்பாடு மற்றும் மதிப்பீட்டு கேள்விகளின் அடிப்படையில் வகுப்பறையில் விவாதங்கள் மற்றும் உரையாடல்களை மேற்கொண்டு மாணவர்களின் உயர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும்.
1 to 3 English Student - Module 1
1 to 3 Tamil Student Resource